அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்


அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் 7 இடங்களில் நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடி மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் பானுபிருந்தாவன் ஹாலில், பகுதிச் செயலர் முருகன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் அ.தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கட்சியில் பழைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு 5 வருடங்கள் முடிவடைந்தபடியால், தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கையோடு, பழைய உறுப்பினர்கள் புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகிறது.

பதவி தேடி வரும்

இந்த முகாம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம், டூவிபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெறுகிறது. கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிச்சாமி அனைத்து காலக்கட்டங்களிலும் துணிச்சலுடன் முடிவெடுப்பவர். இதனால் வரும் காலங்களில் கட்சி உயர்ந்த நிலையை அடையும். வரும் மக்களவைத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டும். அதற்கு, இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

எனவே கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இளைஞர்கள், இளம் பெண்களை கட்சியில் சேர்க்கும் வகையில், அனைத்து கல்லூரி வாசல்களில் முகாம் அமைத்து புதிய இளம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, மகளிர் உறுப்பினர்கள் சேர்ப்பது ஆகிய பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றுவோருக்கு நிச்சயம் பதவி தேடி வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story