அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர் செல்வம் மனு சென்னை ஐகோர்ட்டில் விறுவிறுப்பு விசாரணை


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர் செல்வம் மனு சென்னை ஐகோர்ட்டில் விறுவிறுப்பு விசாரணை
x
தினத்தந்தி 7 July 2022 3:03 PM IST (Updated: 7 July 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர் செல்வம் மனு சென்னை ஐகோர்ட்டில் விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கொர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது.

ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது

பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டாலும், மற்ற நிவாரணங்கள் தொடர்பான கோரிக்கைகளை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடும் போது

கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடத்தும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கபட கூடாது. என

பொதுக்குழு நடத்தலாம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த நிலையில், நான் என்ன செய்ய முடியும்? பொதுக்குழு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகேள்வி எழுப்பினார்.


Next Story