அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் மோதல்
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் மோதல் நாற்காலிகள் வீச்சு; 2 பேர் படுகாயம்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அளவிலான அ.தி.மு.க. சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒற்றை தலைமையை ஏற்க மாட்டோம் எனவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். திடீரென அவர்கள் அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை தூக்கி, மேடையை நோக்கி சரமாரியாக வீசி எறிந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி, மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் கல்வீசி தாக்கியதில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story