அ.தி.மு.க. கட்சியினர் போராட்டம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
அ.தி.மு.க. கட்சியினர் போராட்டம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
ஆரல்வாய்மொழி:
அ.தி.மு.க. கட்சியினர் போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் தெருவிலோ, கழிவுநீர் ஓடையிலோ விடாமல் அதை வீட்டினுள் உறுஞ்சுகுழி அமைத்து விட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் கணேசபுரம் நூலகம் அருகே அ.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் அ.தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுதா பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கவுன்சிலர்கள் ஜோசப் ரத்னராஜ், மாதேவன்பிள்ளை, ஏசுமணி, வள்ளியம்மாள், சுகுணாள், மோகன், தேவி, பாலமுருகன், சுடலையாண்டி, அ.தி.மு.க பேரூர் இணைச்செயலாளர் பேச்சியம்மாள், மாவட்ட பிரதிநிதி கண்ணாடி பாலகிருஷ்ணன், பேரவை செயலாளர் சுந்தரம், மருத்துவர் நகர் அய்யப்பன், பொற்றை பாஸ்கர், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.