அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் மனு


அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் மனு
x

அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் மனு அளித்தார்.

கரூர்

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவனத்தை நேற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வக்கீல்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக்கூட்டம் முதலில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், தி.மு.க. சார்பில் கரூர் மாநகர ேபாலீஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடக்க இருப்பதால் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கரூர் 80 அடி சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து, பேச்சாளர்கள் வருகை தந்து விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் போலீசார் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து, பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். அதனால் அ.தி.மு.க. சார்பில் இன்று (வியாழக்கிழமை) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்க வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story