மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார

நாகப்பட்டினம்

வாய்மேடு:

மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் வரவேற்றார்.

இதில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல தலைஞாயிறு ஒன்றியத்தில் நீர்முளை ஊராட்சியில் ஓ.எஸ் மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் அவை.பாலசுப்பிரமணியன், சவுரிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தேவூர்

கீழ்வேளூர் வடக்கு, தெற்கு ஒன்றிய‌ அ.தி.மு.க. சார்பில் தேவூர் கடைத்தெருவில் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட இணை செயலாளர் மீனா தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் வெண்மணி குமார் வரவேற்றார். இதில் தெற்கு ஒன்றிய பொருளாளர் அசோகன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் காத்தமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் விஸ்வேஸ்வரன், தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன், வடக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் துரை பாஸ்கரன், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story