சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் உள்ளாட்சி மன்றங்களில் தி.மு.க. அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி விதிப்பை கைவிடக்கோரியும், குடிநீர் வினியோக கட்டண உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்படி பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் அருணாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் பலர் தி.மு.க. அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கறுப்பு சட்டை அணிந்து வந்து கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.