கடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,500 பேர் மீது வழக்கு


கடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்:2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,500 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடலூர்

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க.சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட 1,500 பேர் மீது கடலூர்புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story