சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

தமிழகத்தில் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறி அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி சட்சியாபுரம், அவுசிங் போர்டு ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மான்ராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, விஸ்வநத்தம் ஆரோக்கியம், மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், தொகுதி கருப்பசாமி பாண்டியன், சாம், ஒன்றிய மகளிர் அணி செயலாளரும், தேவர்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துவள்ளிமச்சக்காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story