கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில்  அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


மின் கட்டண உயர்வை கண்டித்து கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை அறிவித்த நிலையில் விருதுநகரில் மின்வாரிய அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைத்தலைவர் கலாநிதி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, விருதுநகர் நகர செயலாளர் முகமது நைனார், ஒன்றிய செயலாளர்கள் மச்ச ராஜா, கே.கே.கண்ணன் மற்றும் தர்மலிங்கம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. எதிர்க்கோட்டை சுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக்கனி, ஒன்றிய அவைத்தலைவர் முருகானந்தம், கிளைச் செயலாளர் முருக பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் மாடசாமி, ராஜகுமாரன், சீதாராம் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி கலைச்செல்வி மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராகவும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், நீட் தேர்வு, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story