அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி ஆற்றுப்பாலம் சாலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், அந்த வழக்கை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க.மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் பரமக்குடி ஆற்றுப்பாலம் சாலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம் முன்னிலை வகித்தார். பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் நகரமன்ற உறுப்பினர் வடமலையான் வரவேற்றார்.

இதில் தி.மு.க. அரசை கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.நிறை குளத்தான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர், மாநில மகளிரணி இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர்கள் சாமிநாதன், ரெத்தினம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் மருதுபாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில் துட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, ஒன்றிய பேரவை செயலாளர் பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நகரம் நல்லதம்பி, மாவட்ட பேரவை தலைவர் கதிரேசன், நகர் பேரவை துணைச்செயலாளர் கார்த்தி, ஒன்றிய ஐ.டி. பிரிவு துணை செயலாளர் இந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வளனரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரமக்குடி நகர் செயலாளர் ஜமால் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story