அ.தி.மு.க. 2 அணியினரும் தனித்தனியாக போட்டியிட மாட்டார்கள்


அ.தி.மு.க. 2 அணியினரும் தனித்தனியாக போட்டியிட மாட்டார்கள்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:30 AM IST (Updated: 30 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 2 அணியினரும் தனித்தனியாக போட்டியிட மாட்டார்கள் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

திண்டுக்கல்

பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில், தேவேந்திர குல வேளாளர் மண்டகப்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நேற்று கார் மூலம் நெல்லையில் இருந்து பழனிக்கு வந்தார். வழியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் அவருக்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் முத்துரத்தினவேல் தலைமையில் அக்கட்சியினர் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 2 அணியினரும் தனித்தனியாக போட்டியிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுக்கூடி பேசி ஒருமித்த கருத்துடன் ஒரே வேட்பாளரை நிறுத்த முடிவு செய்வோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அந்த நேரத்தில் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே தெரிவித்தேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞர் அணி தலைவர் வியங்கோ பாண்டியன், மதுரை மாவட்ட செயலாளர் பாலாஜி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், இணைச்செயலாளர் பூபதிராஜா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணக்குமார், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் ராணி கருப்புசாமி மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.


Next Story