அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா


அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா
x
தினத்தந்தி 18 Oct 2022 12:45 AM IST (Updated: 18 Oct 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், கட்சி கொடியேற்றி வைத்தும் கொண்டாடினர்.

தர்மபுரி

தர்மபுரி கட்சி அலுவலகம்

தர்மபுரியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், செந்தில்குமார், பழனி, நகர துணைச்செயலாளர் அறிவாளி, நகர இணை செயலாளர் சுரேஷ், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், மோகன், பழனிசாமி, அசோக் குமார், அண்ணா பணியாளர் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் அங்கு ராஜ், கவுன்சிலர்கள் தண்டபாணி, முன்னா, நாகராஜன், மாதேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒட்டப்பட்டி

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, தொப்பூர், பாளையம் புதூர், ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களுக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.ஜி.எஸ்.சிவப்பிரகாசம் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

மேலும் இந்த விழாக்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி தடங்கம் பழனி, ஒன்றிய அவைத்தலைவர் பச்சியப்பன், ஒன்றிய துணைச்செயலாளர் மாணிக்கம், கிளை செயலாளர் முனுசாமி, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் திருமால் வர்மா, சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜோசப், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தங்கபாலு, மாணவரணி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் குழந்தைசாமி, ஒன்றிய பொருளாளர் மாது, கிளை நிர்வாகிகள் ஜெயவேலு, வீரமணி, தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோளப்பாடி

இதேபோன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா இண்டூர், சோளப்பாடி, பாலவாடி, சோமனஹள்ளி, நத்தஅள்ளி, அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி.பழனி தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த விழாவையொட்டி ஆங்காங்கே உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சக்தி, ஒன்றிய பொருளாளர் ரங்கன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் தனபால், சுரேஷ், லட்சுமி ஜெமினி, நிர்வாகிகள் கலைவாணன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பலராமன், முனிராஜ், முருகேசன், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தூர் ஒன்றியம்

இதேபோன்று கடத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா ராமியன அள்ளி, வகுத்துப்பட்டி, சந்தப்பட்டி, தாதனூர் புதூர், பசுவாபுரம், சிந்தல்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களுக்கு ஒன்றிய செயலாளர் ஜி.மதிவாணன் தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், பொதுக்குழு உறுப்பினர் துரை, மாவட்ட பிரதிநிதி அகிலன், கவுன்சிலர் ருக்மணி அசோகன், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் மணி, கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வராஜ், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story