''சசிகலா தலைமையை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது'' -நாஞ்சில் சம்பத் பேட்டி


சசிகலா தலைமையை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது -நாஞ்சில் சம்பத் பேட்டி
x

‘‘சசிகலா தலைமையை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது’’ என நாஞ்சில் சம்பத் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், ''சசிகலா தலைமையை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது. தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்பில்லை. பீகாரில் தான் தற்போது ஏக்நாத் ஷிண்டே உருவாகியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி, ரூ.5 ஆயிரம் கோடி வரி சலுகை கொடுத்ததால் தான் இந்த நாட்டிற்கு கேடு ஏற்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு இலவசங்களை வழங்குவதால் எந்த ஒரு கேடும் ஏற்படவில்லை. தமிழறிஞர் நெல்லை கண்ணன் இறப்பு தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு'' என்றார்.


Next Story