அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர்-மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர்-மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பேட்டி
x

அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர் என்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை:

'அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர் என்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஒண்டிவீரன் சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவச்சிலைக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கமுத்து, தர்மலிங்கம், மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், நாங்குநேரி ஒன்றிய அவைத்தலைவர் தளவை சுந்தர்ராஜ் மற்றும் கலந்து கொண்டனர்.

பின்னர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்கள்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும்போது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.

அ.தி.மு.க.வின் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம்தான் உள்ளனர். சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம், மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். உண்மையான கட்சி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் இருக்கிறது.

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்று கொண்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்று கொள்வார்கள். கட்சியில் யாரெல்லாம் சேர வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்களோ, அவர்களின் விருப்பத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story