முன்விரோத தகராறு; 3 பேர் கைது
முன்விரோத தகராறு காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வரும் பராசக்தி என்பவரின் மகன் சுந்தரபாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த ஊரில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி சரியான முறையில் நடக்கிறதா என சுந்தரபாண்டியன் பார்த்துள்ளார். அப்போது அங்கு வந்த ராமசாமி தரப்பினருக்கும், சுந்தரபாண்டியன் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. இது குறித்து இரு தரப்பினர் சார்பில் எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமியின் தம்பிகளான கல்வராயன், ஜெயபாலன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.