மின் கம்பங்களில் விளம்பர பதாகை கட்டக்கூடாது


மின் கம்பங்களில் விளம்பர பதாகை கட்டக்கூடாது
x
தினத்தந்தி 7 Aug 2023 1:00 AM IST (Updated: 7 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மின் கம்பங்களில் விளம்பர பதாகை கட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ரோணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான வயர்கள் மற்றும் மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.உடைந்த சுவிட்ச் போர்டுகளை உடனே மாற்ற வேண்டும். கேபிள் டி.வி. ஒயர்களை உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது. மின் கம்பங்களில் பந்தல்களோ, விளம்பர பதாகைகளையோ கட்டக்கூடாது. மழை நேரங்களில் அறுந்து விழுந்த மின்கம்பிகளுக்கு அருகே செல்லக் கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்னல் அடிக்கும்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த கூடாது. உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story