பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை


பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Nov 2022 10:12 PM IST (Updated: 20 Nov 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டிற்கு இன்று திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து, வாழ்த்து பெற்றனர். பின்னர் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.


Related Tags :
Next Story