பவானியில் நாளை நடக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை


பவானியில் நாளை நடக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை
x

பவானியில் நாளை நடக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

ஈரோடு

பவானி

பவானி அரிசி மார்க்கெட் திடலில் தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடக்கிறது. இதுசம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று பவானியில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கைலாசம், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், வடக்கு மாவட்ட தலைவர் செங்கை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனரும், அரசு உறுதிமொழி குழு தலைவருமான வேல்முருகன் பவானியில் நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தருகிறார். எனவே அவருக்கு நாளை மாலை 4 மணி அளவில் பவானி பழைய பஸ் நிலையம் கூடுதுறை வளைவு அருகே சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொதுக்கூட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், தலைமை நிலைய பேச்சாளர் திருவெற்றியூர் மாரிமுத்து ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story