பூஜாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்
பூஜாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வாய்மேடு மேற்கு பின்னையடி மாரியம்மன் கோவிலில் பூஜாரிகள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பழனிவேல், செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கந்தசாமி, பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுக்கும், வீட்டுக்கும் தனிமனிதனுக்கும் கலாசாரத்துக்கும் அழிவை ஏற்படுத்தும் மதுக்கடைகளை ஒழித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். பட்டா இல்லாத கோவில்களை வரைமுறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும். கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயது முடிந்த அனைத்து பூஜாரிகளுக்கும் ஓய்வூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story