ஆலோசனை கூட்டம்
சாயல்குடியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
சாயல்குடியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் தர்மமூர்த்தி, கடலாடி ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி, துணைத்தலைவர் தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது கட்சி தலைவர் திருமாறன் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் விஜய ராஜன், மாநில இளைஞரணி செயலாளர் கர்ணன், சாயல்குடி ஒன்றிய தொழிற்சங்க தலைவர் குருமூர்த்தி, கடலாடி ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜி, கடலாடி ஒன்றிய பொருளாளர் முனிஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story