ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள பஜனை மடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகணேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட பொறுப்பாளர் இசக்கி லட்சுமி, மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்தர், மாவட்ட துணைத்தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story