ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

பாளையங்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவலிங்கமுத்து தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் முருகேசன், பணகுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் லாரன்ஸ், நாங்குநேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திர மணி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விரைவில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story