ஆலோசனை கூட்டம்
இளையான்குடி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின்யின் தலைமையில் மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன்தேவர் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குமாரக்குறிச்சி பெருமச்சேரி, கீழாய்க்குடி, இளமனூர் தாயமங்கலம், கருஞ்சுத்தி, மேலாயூர், மேலத்துறையூர், செந்தமிழ் நகர் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்களை அழைத்து குருபூஜை விழாவிற்கு செல்பவர்கள் காவல்துறையின் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் போலீசாரின் அனுமதி இன்றி செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story