ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டி.ஜ.ஜி. பொன்னி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர், அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உட்கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தேவர் குருபூஜையை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். சொந்த வாகனங்களில் செல்வோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு டி.ஐ.ஜி. பொன்னி அறிவுறுத்தினார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். கூட்டத்தில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story