ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

சுரண்டை அருகே இடையர்தவணை மீனாட்சிபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

சுரண்டை:

சுரண்டை அருகே இடையர்தவணை மீனாட்சிபுரத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் வழிகாட்டுதலின்படி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தென்காசி நகர தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகையா வரவேற்றார்.கூட்டத்தில் மண்டல மாநாட்டை சுரண்டையில் வைத்து நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடையர்தவணை மீனாட்சிபுரம் உறவின் முறை நிர்வாகிகள் சிவலிங்கம், முருகையா, காமராஜ், செல்லக்கனி, ஆதி மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story