ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பட்டாசு தொழிற்சாலை மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ், தனி வட்டாட்சியர் (தீப்பெட்டி தொழிற்சாலை) ஸ்ரீதரன், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரெங்கநாதன், தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர், சங்க உறுப்பினர்கள், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் இதர பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் புதிதாக தோற்றுவிக்கும் பொருட்டு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் நலவாரியத்திற்கு நிதி வழங்குதல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.


Next Story