விழுப்புரத்தில்குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது


விழுப்புரத்தில்குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் வருகிற 26-ந் தேதியன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் மைதானம் சீரமைக்கும் பணி, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் உரிய இருக்கைகள் அமைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மேடை மற்றும் பந்தல் அமைத்தல், காவல் பாதுகாப்பு பணி, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், மைதானத்தை சுற்றி அலங்கரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும், அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்புடன் மேற்கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story