ஆலோசனை கூட்டம்
நிலக்கோட்டையில், பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நிலக்கோட்டையில், பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு துணைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் முருகன், தாலுகா செயலாளர் ஆரோக்கியம், சட்ட ஆலோசகர் கவுரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் பொருளாளர் இளங்கோ வரவேற்றார்.
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றப்படும் என்று சட்டசபையில் அறிவித்ததை திரும்ப பெற வேண்டும். பிரமலைக்கள்ளர்கள் இனத்திற்கான சாதி சான்றிதழை முறைப்படுத்தி பழங்குடி இன மக்கள் என வழங்க வேண்டும். பி.கே.மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டையில் மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பேரணி நடத்துதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.