காட்டுமன்னார்கோவிலில்போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்டி.எஸ்.பி. ரூபன்குமார் தலைமையில் நடந்தது


காட்டுமன்னார்கோவிலில்போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம்டி.எஸ்.பி. ரூபன்குமார் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி. ரூபன்குமார் தலைமையில் நடந்தது

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் பகுதி சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட வட்டார ஊர்க்காவல் படை தளபதி அம்ஜத்கான், வர்த்தக சங்க தலைவர் சீனிவாச நாராயணன், பேரூராட்சி மன்ற தலைவர் கணேசமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டி.எஸ்.பி. ரூபன்குமார் பேசுகையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மே 1-ந்தேதி முதல் காட்டுமன்னார்கோவிலுக்குள் வரும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒருவழிப்பாதையை அவசியம் கடைபிடிக்க வேண்டும். ஆகவே போக்குவரத்து நெரிசலை குறைக்க வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story