ஆலோசனை கூட்டம்
சுரண்டையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டையில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி குருஸ் திவாகர், அவைத்தலைவர் கே.வி.கே.துரை, பொருளாளர் ராமராஜ், ஒன்றிய செயலாளர் ராஜபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர செயலாளர் சபரிகனி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் கலந்து கொண்டு, கட்சி வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினார்.
கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் சுமதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ராஜபிரபு, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயசந்திர பாண்டியன், கடையநல்லூர் கலைமகன் ரவி, கடையம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி ராஜன், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் முருகேசன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் பொன்ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.