ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சின்னசேலத்தில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சின்னசேலம்
சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி வரவேற்றார். இதில் ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது, குடிநீர் இணைப்புக்கான வைப்பு தொகை, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களுக்கு வரி, புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி மற்றும் வரி வசூலிப்பது உள்ளிட்ட நிதி ஆதாரங்களை பெருக்கி ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் அடிப்படை தேவைகளை பொதுமக்களுக்கு நிறைவேற்றி தருவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சமுத்து, மணிமேகலை, பழனிவேல், ஆறுமுகம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.