ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பெ. மனோகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) வெங்கடேஷ் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், பல்வேறு திட்டங்களின் கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்டு, தொடங்கப்படாமல் இருக்கும் பணிகளை உடனே தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும். தூய்மை பாரத திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், 15-வது நிதி குழு மானியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டப்பட்டது.
தலைமை இடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.வேலு, வே.ஆனந்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், ரமேஷ் குமார், ஆனந்த ஜோதி லட்சுமி, நந்த கோபி உள்ளிட்ட 39 ஊராட்சிகளின் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.