நெய்வேலியில் 30-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு
நெய்வேலியில் 30-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டார்.
கடலூர்
நெய்வேலியில் வருகிற 30-ந் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமிற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் ஜெகதீசன், நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story