2 நாட்கள் தடைக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


2 நாட்கள் தடைக்கு பிறகு  கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x

கொடிவேரி அணை

ஈரோடு

2 நாட்கள் தடைக்கு பிறகு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.

கொடிவேரி அணை

கோபி அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணைக்கு பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்போது தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டு்ம். இங்கு திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

குளிக்க அனுமதி

இந்த நிலையில் கொடிவேரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் கொடிவேரி அணையில் தண்ணீர் அதிக அளவு சென்றது. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர்.

தற்போது கொடிவேரி அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் நேற்று முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் அணையில் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story