முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை - அமைச்சர் துரைமுருகன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது மழைக்கால கூட்டத்தொடர் 3-வது நாள் கூட்டம் சட்டசபையில் இன்று நடைபெற்று வருகின்றது. சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story