கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு கடன் உள்ளதாக வந்த நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி


கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு கடன் உள்ளதாக வந்த நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிக்கு ரூ.12 ஆயிரம் கடன் செலுத்த நோட்டீசு வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிக்கு ரூ.12 ஆயிரம் கடன் செலுத்த நோட்டீசு வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

கடன் தள்ளுபடி

தண்டராம்பட்டு தாலுகா தென்கரும்பலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 36). விவசாயியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு தென்கரும்பலூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு பயிர் கடனை அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது.

அதன்படி கார்த்திகேயன் வாங்கிய பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை வங்கி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

அதன்பிறகு கார்த்திகேயன், பயிர் செய்வதற்கு தேவைப்படும் பணத்துக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று பயிர் கடன் கேட்டுள்ளார்.

அப்போது வங்கி அலுவலர், உங்களுக்கு கடன் உள்ளது. அதனை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடையந்த கார்த்திகேயன், நான் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்முடு விட்டது. எனக்கு வங்கியில்எந்த கடனும் இல்லை என கூறியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் உங்கள் மீது ரூ.12 ஆயிரம் கடன் உள்ளது என்றும், அதனை கட்ட வேண்டும் என்றும் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகம் கார்த்திகேயன் வீட்டிற்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் மனு கொடுத்திருந்தார். ஆனால் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கார்த்திகேயன் நேற்று வாணாபுரம் போலீ்ஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தார்.

நடவடிக்கை

அதில், ''நான் தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எனக்கு எந்த விதமான கடன் இல்லை. ஆனால் என் மீது கடன் உள்ளது என்றும், அதனை செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் வீட்டிற்கு எனது நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story