அகல் விளக்குகள் செய்யும் பணி மும்முரம்


அகல் விளக்குகள் செய்யும் பணி மும்முரம்
x

கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையில் அகல் விளக்குகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி

கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையில் அகல் விளக்குகள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கார்த்திகை விழா

கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படும். அன்று பக்தர்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி சாமியை வழிபடுவார்கள்.

மேலும் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதேபோல் அனைத்து கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும்.

நெல்லையை பொருத்தவரை நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சாலைகுமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருக்கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். அன்று கோவில் முழுவதும் திருவிளக்குகளை ஏற்றி வைக்கப்படுகிறது.

அகல் விளக்கு

இதையொட்டி அகல் விளக்குகள் செய்யும் பணியில் நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மன் கோவில்களில் சூறை விழா நடத்தப்படும். இதற்காக மண் பானைகளில் பொங்கல் வைத்தும், கலயத்தில் கும்பம் வைத்தும் பூஜை செய்யப்படும். இதற்காக கலயம் மற்றும் மண்பானை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.


Related Tags :
Next Story