கோணக்கடுங்கால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
கோணக்கடுங்கால் வாய்க்காலில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் கோணக்கடுங்கால் வாய்க்கால். இந்த வாய்க்கால் வடிகால் வாய்க்காலாகவும், பாசன வாய்க்காலாகவும் பயன்பட்டு வருகிறது. இந்த வாய்க்காலில் திருக்காட்டுப்பள்ளி கூடநாணல் பகுதியில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மழை காலங்களில் வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோணகடுங்கால் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story