ஆகாய வீரன் கோவில் கும்பாபிஷேகம்


ஆகாய வீரன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஆகாய வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீரபோகம் கிராமத்தில் உள்ள ஆகாய வீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, முதற் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை நேற்று காலை தொடங்கி நடந்தது. இதைத்தொடர்ந்து கடகங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான பதினெட்டு கருப்பு, ஆகாய வீரன், பச்சைவாழியம்மன் மூலஸ்தான விமானத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story