பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள்


பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள்
x

சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் மேலத்தேனூர், தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, மருதங்குடி, கொட்டாயமேடு, பத்தங்குடி, ஆலஞ்சேரி, சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். கழுமலையார் பாசன வாய்க்காலில் புதிய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, ரயில்வே ரோடு, புழுகாபேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

இதன் காரணமாக விவசாயிகள் முறையாக பாசன வசதி பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ஆகாயத்தாமரை மண்டி துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கொண்டல் முதல் திருத்தோணிபுரம் வரை கழுமலையாறு பாசன வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


Next Story