உதவித்தொகை வழங்கமாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம்


உதவித்தொகை வழங்கமாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான வயது தளர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறன் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனையின்போது 40 சதவீதத்திற்கு மேல் உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு அறிவித்த மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்க பரிந்துரைத்தனர். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு, அவர்கள் சமூகத்தில் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, டாக்டர்கள் சுரேஷ்குமார், உதயச்சந்திரன், சரவணன், சுதாகரன், உமாராணி, லலிதா, செழியன், பாலமுருகன், பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story