திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர்

பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியவாசிய உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதை கண்டித்தும், இந்த வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் கனகராஜ், பொதுச்செயலாளர் குமரேசன், செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் தலைவர் அருள், சங்க நிர்வாகிகள் நடனம், மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story