பணி நேரத்தை நீட்டிப்பதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நேரத்தை நீட்டிப்பதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நேரத்தை நீட்டிப்பதை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை நீட்டிப்பதை கண்டித்தும், இதுதொடர்பாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறக்கோரியும் மயிலாடுதுறை அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மருதவாணன், கார்த்திக்சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களின் பணி நேரத்தை நீட்டிக்கும் வகையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story