மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்த வசந்தா என்பவரின் சொத்துக்களை அபகரித்தவர்கள், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்கள் தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மணல்மேடு போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிட மக்கள் இயக்கம் சார்பில் மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் மாநில தலைவர் வசந்த மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜபிரபு முன்னிலை வைத்தார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story