தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்


தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து   மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
x

தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மயிலாடுதுறை ெரயில் நிலையம் 1-வது நடைமேடையில் தென்னக ெரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை கிளை செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். கும்பகோணம் கிளை செயலாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். இதில் மண்டல நிர்வாகி வீரமணி கலந்து கொண்டு பேசினார். `பாரத் கவுரவ்' என்ற பெயரில் 150 ெரயில்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டதை கண்டித்தும், `வந்தே பாரத்' திட்டத்தில் 200 ெரயில்களை தனியாரிடம் விட முயலும் நடவடிக்கையை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தென்னக ெரயில்வே மஸ்தூர் யூனியன் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொறுப்பாளர் சாகுல்அமீது நன்றி கூறினார்.


Next Story