சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
கீழையூர் ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் பூங்கோதை தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிரணி குழு உறுப்பினர் வளர்மாலா முன்னிலை வகித்தார். இதில் சங்க மாவட்ட பொருளாளர் பாலம்பாள், இணை செயலாளர் அருளேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை சிற்றுண்டியை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், அம்மா உணவகங்கள் மூலமும், வெளியில் சமைத்து பள்ளிகளில் வழங்குவதற்கு பதிலாக பள்ளி சத்துண மையங்களிலேயே காலை சிற்றுண்டியை சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசி, மாவட்ட தணிக்கையாளர் இசைவானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story