தஞ்சையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலாளர் வெங்கடேஷ், மாநில அமைப்பு செயலாளர் பஞ்சநாதன், கோட்ட செயலாளர்கள் ராஜ்குமார், வெங்கடாஜலம், கோட்ட தலைவர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய சம்மேளன அறைகூவலின்படி போனஸ் வழங்காமல் கால தாமதம் செய்யும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர்கள் கருப்புசாமி, செந்தில்குமார், கோட்ட தலைவர்கள் குணசீலன், வைத்திலிங்கம், முருகேசன், கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story