அக்னீஸ்வரர் கோவில் குளம் திருப்பணி


அக்னீஸ்வரர் கோவில் குளம் திருப்பணி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் குளம் திருப்பணி

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள அகனி சுற்றுச்சுவர் முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக கோவில் குளம் சுற்றுச்சுவர் சீரமைக்கும் திருப்பணியை நாகை மாவட்ட கலெக்டர் நிதியில் ரூ.7 லட்சத்திற்கான பணிகளை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் இளைய ஆதீனம் அஜபா நடேஸ்வர சுவாமிகள், திருப்புகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், கோவில் கணக்கர் செல்வம் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story