சங்கராபுரத்தில் விவசாய சங்க ஒன்றிய மாநாடு


சங்கராபுரத்தில்   விவசாய சங்க ஒன்றிய மாநாடு
x

சங்கராபுரத்தில் விவசாய சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சங்கராபுரம் ஒன்றிய 17-வது மாநாடு சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் சிவாஜி, தமிழ்நாடு விவசாய சங்க பொருளாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் நாகராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரகுராமன், சக்திவேல் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story